41 பேர் முதலிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் வரலாற்றுச் சாதனை

0

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று 41 மாணவர்கள் முதலிடத்தை பெற்றுள்ளனர். இது, தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு வரலாற்றில் ஒரு புதிய சாதனையாகும். தேர்வெழுதிய மாணவ-மாணவிகளில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது.10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 19ந் தேதி தொடங்கி ஏப்.10 தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 10 லட்சத்து 60 ஆயிரத்து 866 மாணவர்கள் எழுதினர். அதாவது, கடந்த ஆண்டை விட 40ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக தேர்வெழுதினர்.

இந்த தேர்வு முடிவுகளை வியாழனன்று (மே 21) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில், அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் வெளியிட்டார்.இவ்வாண்டு தேர்வெழுதிய 5 லட்சத்து 33 ஆயிரத்து 43 பேரில் மாணவர்கள் 90.5 சதவீதத்தினரும், 5 லட்சத்து 27 ஆயிரத்து 823 பேரில் மாணவிகள் 95.4 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மொத்தத்தில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு தேர்ச்சி விகிதம் 90.7 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது.தேர்ச்சி பெற்றவர்களில் 7 லட்சத்து 96 ஆயிரத்து 466 பேர் 60 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப் பெண்களை பெற்றுள்ளனர்.

இந்த எண்ணிக்கையில் கடந்த ஆண்டை விட 86 ஆயிரத்து 456 பேர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தில் 98.04 சதவிகிதம் பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடத்திலும், 83.79 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்ற திருவாரூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பெற்றுள்ளது.

மாநில முதலிடம்

முதல் மதிப்பெண்கள் மொத்தம் அரசுப் பள்ளிகள்

499/500 41 3 பேர்

498/500 192 6 பேர்

497/500 540 10 பேர்

Share

NO COMMENTS

Leave a Reply