தமிழை முதல்பாடமாக எடுத்த மாணவிகள் திருப்பூர் பவித்ரா, கோவை நிவேதா முதலிடம்

0

தமிழகத்தில், பிளஸ் டூ எனப்படும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை வெளியானது. வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவிகளே முதலிடம் பிடித்துள்ளனர்.

திருப்பூர் மாவடடம் விகாஷ் வித்யாலயா பள்ளி மாணவி பவித்ரா 1192 மதிப்பெண் பெற்றுள்ளார். கோவை சௌடேஸ்வரி பள்ளி மாணவி நிவேதிதா 1192 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர்கள் தமிழை முதல்பாடமாக எடுத்து படித்தவர்கள்.

1190 மதிப்பெண்கள் பெற்று விக்னேஸ்வரன், பிரவீன், சரண்ராம், வித்யா வர்ஷினி ஆகிய 4 பேர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். நாமக்கல் டிரினிட்டி பள்ளியைச் சேர்ந்த மாணவி பாரதி 1189 மதிபெண்கள் எடுத்து 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தத் தேர்வில் மாணவிகள் 93.4 சதவீதமும், மாணவர்கள் மாணவர்கள் 87.05 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 9410 மாணவ, மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இயற்பியலில் 124 பேரும், வேதியலில் 1049 பேரும், உயிரியலில் 387 பேரும், , தாவரவியலில் 74 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

Share

NO COMMENTS

Leave a Reply