1194 மதிப்பெண்கள் எடுத்த ஸ்ரீஷா, மகாலட்சுமி- பிரெஞ்ச், சமஸ்கிருதம் படித்து முதலிடம்

0 44

சென்னை: தமிழ் மொழிப்பாடமாக இல்லாமல் ப்ரெஞ்ச் மொழியை முதல் பாடமாக படித்த சென்னை வேலம்மாள் பள்ளி மாணவி ஸ்ரீஷா 1194 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

கோபாலபுரம் டி.ஏ.வி பள்ளி மாணவி மகாலட்சுமி 1194 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் இவர் சமஸ்கிருதப்பாடத்தை முதலாவதாக எடுத்து படித்துள்ளார். மதுரை ஜீவனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பார்வதி சேலம் கிளன்னி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ப்ரீத்தி ஆகிய இருவரும் 1193 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ப்ரெஞ்ச் பாடத்தை முதலிடமாக எடுத்து படித்தவர்கள். சேலம் கிளன்னி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ரத்னா சுதாகர் 1192 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இவர் ப்ரெஞ்ச் பாடத்தை முதலாவதாக எடுத்து படித்துள்ளார். மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ராதேஷ் 1192 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் சமஸ்கிருதம் பாடத்தை முதலிடமாக எடுத்து படித்துள்ளார்.

வேறு மொழிப்பாடம் இவர்கள் தமிழை முதல் பாடமாக எடுக்காததால் 1194 மதிப்பெண்கள் எடுத்தாலும் முதலிடம் பிடித்தவர்களாக கருத்தப்பட மாட்டார்கள். 1192 மதிப்பெண்கள் எடுத்த தமிழை முதல் பாடமாக எடுத்த திருப்பூர் பவித்ரா, கோவை நிவேதா ஆகியோரே முதலிடம் பிடித்ததாக கருத்தப்படுவர். டாக்டர் படிக்க ஆசை முதலிடம் பிடித்த டி.ஏ.வி பள்ளி மாணவி மகாலட்சுமி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

டாக்டர் ஆக ஆசை,எனவே நான் டாக்டருக்கு படிக்க விரும்புகிறேன் என்று கூறினார். ஆசிரியர்கள் எனக்கு உதவி செய்தனர், முதல்வர் ஆகியோர் நன்றாக உதவி செய்தனர். நான் டியூசன் எதுவும் போகவில்லை.

என்னுடைய தாத்தா பாட்டி, அனைவருக்கும் நன்றி. வீட்டில் என்னோட பெற்றோர்கள் என்னை தொந்தரவு செய்தது இல்லை என்று கூறினார். இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட மகாலட்சுமியின் தாயார், அவளுடைய வெற்றிக்கு அவளே காரணம் என்று கூறினார்.

எந்த வேலையையும் தள்ளியே வைக்கமாட்டார்கள் என்று கூறினார் அவரது தாயார். ஆசிரியர்களின் முழு ஆதரவு கிடைத்தது என்றார். சி.ஏ படிக்க ஆசை இதேபோல மாநில அளவில் முதலிடம் பிடித்த முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவி ஸ்ரீஷா சி.ஏ படிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மாணவியின் பெற்றோர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மாணவிக்கு என்ன படிக்க ஆசையோ அதையே படிக்க வைக்க இருப்பதாக தெரிவித்தனர்.

NO COMMENTS

Leave a Reply