மீன்பிடித் தடைக்காலம் எத்தனை நாள்? தொடரும் குழப்பம் மீனவர்கள் தவிப்பு
விசைப்படகு மீனவர்க ளுக்கான மீன்பிடித் தடைக்காலத்தில் தொடர்ந்து குழப்பம் நீடிப்பதால் தமிழக அரசு முறையான அறி விப்பை வெளியிட வேண்டுமென மீனவர்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக கடற்கரைப் பகுதியில் ஏப்ரல் 15-ஆம்–தேதி முதல் மே மாதம் 29-ஆம்– தேதி வரை 45 நாட்கள் மீன்களின் இனப்பெருக்கக் காலமாக அறிவிக்கப் பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் விசைப்படகு கள் மீன்பிடிக்கச் செல் வதற்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்துள்ளது.அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. தற்போது, விசைப் படகுகளில் ஏற்பட்டு உள்ளசீரமைப்பது, சேதமடைந்தவலைகளை சீரமைப்பதுஉள்ளிட்ட பணிகளை மீனவர்கள் மேற்கொண்டுள்ள னர்.
இந்த நிலையில், மீன் பிடித் தடைக்காலத்தை 61நாட்களாக உயர்த்தி மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட் டுள்ளது. ஆனால், இது வரை தமிழ்நாடு அரசு உரிய அறிவிப்பு ஏதும் வெளி யிடவில்லை. இதனால் மீனவர்கள் மத்தியில் தடைக் காலம் 45 நாட்களா அல்லது 61 நாட்களா? என்றகுழப்பம் நீடித்து வருகி றது.இதுகுறித்து தூத்துக் குடி விசைப்படகு தொழிலாளர் சங்கச் செயலாளர்பார்த்திபன் கூறியதாவது:- தூத்துக்குடி மாவட்டத் தில் மீன்பிடித் தடைக்காலம்45 நாட்கள் அறிவிக்கப் பட்டு படகுகள் கட்டப்பட் டுள்ளன.
ஆனால் இந்தத் தடைக் காலத்தை மத்திய அரசு திடீரென 61 நாட்கள் என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மீன்வளத் துறை எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை.அதே நேரத்தில் 45 நாட்கள் தடைக்காலம் முடிந்த பிறகு விசைப்படகுகள் மத் திய அரசின் தடைக்காலம் முடியும் வரை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள12 கடல் மைல் தொலைவுக் குள் விசைப்படகுகளை இயக்கி மீன்பிடிக்குமாறு மீன்வளத்துறை அறிவுறுத் தியதாகத் தெரிகிறது. 12 கடல் மைல் தொலைவு வரைநாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருப் பார்கள்.
இதனால் வலைகள் சேதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகை யால், அரசு மீன்பிடித் தடைக்காலம் 45 நாட்களா அல்லது 61 நாட்களா என்பதை முறைப்படி அறி விக்க வேண்டும். அதே நேரத்தில் தடைக்காலத்தை அதிகரிப்பதால் மீனவர்கள்பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் தடைக்காலத்தை நீட்டிக்கக்கூடாது தடைக்காலத்தைநீட்டித்தால் மீனவர்கள்போராட்டம் நடத்த தயாராகஉள்ளனர். அதே நேரத்தில்தடைக்காலம் அதிகரித் தால் நிவாரண தொகையை யும் உயர்த்தி வழங்க வேண்டுமென்றார்.