சதுரகிரி : வெள்ளத்தில் சிக்கிய 7 பேர் உடல் மீட்பு
சதுரகிரி மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியில் வத்திரா யிருப்பை அடுத்துள்ளது சதுரகிரி மலை. இங்குள்ள சுந்தரமகாலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
பள்ளி விடுமுறைக்காலம் என்பதாலும், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங் களில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் ஞாயிறன்று அதிகாலையிலிருந்து வந்த வண்ணம் இருந்தனர். சதுரகிரி மலைப்பகுதி அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் வழியில் செங்குத்தான பாறைகளும், கரடுமுரடான பாதைகளும் உள்ளன. குறுகிய பாதைஎன்பதால் மக்கள் மெதுவாக சென் றனர். இந்நிலையில் ஞாயிறன்று மதியம்மலைப்பகுதியில் மதியம் 3 மணியளவில் கனமழை பெய்தது.
இதனால் மலையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் குளித்துக் கொண்டிருந்த 10க்கும் மேற்பட் டோர் அடித்துச் செல்லப்பட்டனர்.இதனால் அனைவரும் அச்சமடைந் தனர். மலையில் சிக்கிக் கொண்ட அவர்கள்செல்ல வழியின்றி தவித்தனர். வெள்ளத் தில் அடித்துச் செல்லப்படாமல் இருக்க சிலர் மரத்தில் ஏறினர். இது குறித்து தகவல்அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவஇடத்திற்கு வந்து வெள்ளத்தால் வெளியேற முடியாத மக்களை கயிறு கட்டி மீட்டனர்.
மேலும் காட்டாற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்றது. அப்போது ஒரு பாறை இடுக் கில் இறந்துகிடந்த சுமார் 18 வயது மதிக் கத்தக்க ஒரு வாலிபரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.இது குறித்து விசாரணை நடத்தியதில் இறந்து கிடந்தவர் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கீழத்தெருவை சேர்ந்த ராஜா மகன் பொன்ராஜ் (19) என்பது தெரியவந்தது. இவர் தற்போது பிளஸ்- 2 தேர்வில்தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரவிருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மற்றவர்களையும் தேடும் பணி இரவு முழுவதும் நடைபெற்றது.
இதில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்கள் யார்? என்றுஅடையாளம் தெரியவில்லை.இந்த நிலையில் திங்களன்று காலை மேலும் சிலரின் உடல்கள் மீட்கப்பட்டன. இறந் தவர்களில் வத்திராயிருப்பை சேர்ந்த பாஸ் கர் (27), பட்டுக்கோட்டையை சேர்ந்த உதய கணேஷ் (22) தூத்துக்குடியைச் சேர்ந்த அனந்தப்பன்(55) என தெரியவந் துள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாராமன், மதுரை ஆட்சியர் இல.சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை தீவிரப்படுத்தினர்.
மலையில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதால் ஞாயிறு இரவு தொடங்கிய மீட்புப் பணி திங்க ளன்று காலை வரை தொடர்ந்து நடை பெற்றது. தற்போது வரை பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 2500க் கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சதுரகிரி மலைக்கு செல்லும் பகுதியை வனத் துறையினர் அடைத்தனர். காட் டாற்று வெள்ளத்தில் சிக்கிய 7 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன.
இதில் மேலும் பலர் சிக்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து பலர் தங்களுடன் கோவிலுக்கு வந்த உற வினர்களை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.மலையில் இருந்து இறங்கி வந்த மதுரையை சேர்ந்த மணி என்பவர் கூறுகையில், அமாவாசையையொட்டி தரிசனம் செய்வதற்காக சதுரகிரி மலைக்கு மாதந்தோறும் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். நேற்று அமாவாசை என்பதால் விடுமுறை விடப்பட்டதாலும் வழக்கத்தை விட சதுர கிரி மலைக்கு கூட்டம் அதிகமாக இருந்தது. காலையில் சாமி தரிசனம் செய்து விட்டு அடிவாரத்துக்கு இறங்கி கொண்டிருந்தேன்.
அப்போது கனமழை பெய்தது. மழை பெய்து கொண்டிருந்ததால் மலைமேல் உள்ள கருப்பசாமி கோவில் அருகேஉள்ள சிற்றோடையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் குளித்துக் கொண்டிருந்த 10க்கும் மேற்பட்டோர் இழுத்துச் செல்லப்பட் டனர். இரவில் மழை குறைந்ததையடுத்து மீட்புப் படையினர் உதவியுடன் அடி வாரத்துக்கு வந்தோம் என்றார்.இதற்கிடையில் சென்னை சேலை யூரை சேர்ந்த பிரதீப்குமார் (45) என் பவர் சதுரகிரிக்கு வந்திருந்தார். அங்கு, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.ஆனால் செல்லும் வழி யிலேயே பிரதீப் குமார் இறந்தார். தாணிப்பாறையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் குறித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.