சென்னையில் கடும் வெயில்

இந்த ஆண்டு கோடையில், இத்தனை நாட்களில் இல்லாதவாறு வியாழனன்று அதிகபட்ச வெப்பம் பதிவாகி உள்ளது. காலை முதல் கொளுத்தத் துவங்கிய வெயில் காரணமாக நகரின் வெப்பம் 41 டிகிரி செல்சியஸ் (105.8 பாரன்ஹீட்) என்ற அளவை தொட்டது. இதன் காரணமாக பகலில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. மாலை 4 மணிக்கு மேல் கடல்காற்று வீசத்துவங்கியதும், ஓரளவிற்கு வெப்பம் தணிந்தது.

NO COMMENTS

Leave a Reply