ஸ்ரீரங்கம் நிலைமை ஆர்.கே. நகருக்கு வரலாமா? ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி

“ஸ்ரீரங்கம் தொகுதிக்கு ஏற்பட்ட நிலைமை ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏற்பட விட்டுவிடாதீர்கள்,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் சி. மகேந்திரனுக்கு ஆதரவு திரட்ட 42வது வட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜி. ராமகிருஷ்ணன்,“இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் எதிர்பாராமல் வந்தல்ல. திடீரென திணிக்கப்பட்டது” என்றார். அவரது உரையின் முக்கியப் பகுதிகள் வருமாறு:

கடந்த 18 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய, பெங்களூரு தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதனால், முதலமைச்சர் பதவியை இழந்த ஜெயலலிதாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து செய்த மேல்முறையீட்டில், தனது தீர்ப்பை மூன்றேநிமிடத்தில் வாசித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா குற்றமற்றவர் என அறிவித்தார். அந்தத் தீர்ப்பு இறுதியானது அல்ல என்றும், உச்சநீதிமன்றத்தில்

கர்நாடக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே வலியுறுத்தியது.

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கருத்தை சகித்துக்கொள்ள முடி யாத ஆளும்கட்சி ஏடு,என்னை கிண்டல் செய்து(கையில் திருவோட்டுடன் செல்வது போல்) கேலிச்சித்திரம் வரைந்தது. இதற்காக வெட்கப்படவேண்டி யது அதிமுகதான். சட்டமன்ற உறுப்பினர் பதவி களைப் பயன்படுத்தி கோடி கோடியாய்ப் பணத்தைக் கொள்ளையடிப்பதைக் காட்டிலும் மக்களிடையே உண்டியல் ஏந்தி கட்சிநடத்துவதையே பெருமை யாக கருதுகிறோம்.உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக மாநில அரசு மிக விரைவில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்ய உள்ளது. நீதிபதி குமாரசாமியின் தீர்ப்புக்கு இன்னும் சில மாதங்களில் இடைக்காலத் தடையும் பெற உள்ளது. இதனால், ஜெயலலிதா திரும்பவும் சிறைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே, ஸ்ரீரங்கம் மக்களுக்கு ஏற்பட்ட நிலைமை ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏற்படக் கூடாது!

முதலமைச்சராகப் பதவியில் இருக்கும்போதே ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறைக்குச் சென் றவர் என்ற பெருமை கொண்டவர் ஜெயலலிதா. அவரையே மீண்டும் சட்ட மன்ற உறுப்பினராக தேர்வுசெய்ய ஆர்.கே. நகர் தொகுதியில் ஓட்டுக்கேட்டு வீதி,வீதியாக பண மூடை களுடன் ஆளும் கட்சியின் பரிவாரங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.தமிழகத்தில் கொலை,கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தென் கோடி மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடியில் கடந்த 10 மாதங்களில் மட் டும் 100 படுகொலைகள் நடந்துள்ளன. இதன் பின்னணியில் சாதியும், மணல் கொள்ளையும் மறைந்திருக் கின்றன. ஆனால், காவல் துறையும், அரசும் கண்டுக் கொள்ளாமல் இருப்பதால் சட்டம் – ஒழுங்கு மிக மோசமாகி வருகிறது.

மறுபுறத்தில், ஆட்சியதி காரத்தில் இருப்பவர்கள் மேல் மட்டம் முதல் கீழ்மட்டம் வரை எதற்கெடுத் தாலும் பணம், பணம் எனலஞ்சம் கரைபுரண்டோடு கிறது. இதற்கு உதாரணம், வேளாண்மைத்துறையில் நேர்மையாக பணியாற்றி வந்த அதிகாரி முத்துக் குமாரசாமியின் தற்கொலை. இந்தச் சம்பவத்திற்குப் பிறகும், ஆளும் கட் சியினர் திருந்தவில்லை.தற்போது நடைபெற்று வரும் தொழில்நுட்ப உதவி யாளர் பணி நியமனத்திற்கு நபர் ஒருவருக்கு 5 லட்சம்ரூபாய் வரை லஞ்சம் பெறு வதாகக் கூறப்படுகிறது. போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர், நடத்துநர், தொ ழில்நுட்ப பணியாளர் நியம னத்திலும் பணம் விளை யாடுகிறது என்று தகவல் கள் வருகின்றன.காங்கிரசைக் காட்டி லும் மத்திய பாஜக அரசு, புதிய பொருளாதாரக் கொள்கைகளை வேகவேகமாக அமல்படுத்தி வரு கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், நிலம்கையப்படுத்தும் அவசரச் சட்டம், தொழிலாளர் களின் உரிமைகளை பறிக்கும் சட்டம் என 12 சட்டங்களை கொண்டு வந்துள் ளது. மக்களைப் பாதிக்கும்மோடி அரசின் கொள் கைகளுக்கு முழுமையாக ஆதரவு அளித்து வரும் ஜெயலலிதாவுக்கு ஆர்.கே. நகர் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு ஜி. ராம கிருஷ்ணன் கூறினார்.

NO COMMENTS

Leave a Reply