மெட்ரோ ரெயில் கட்டுமான கம்பி விழுந்து சென்னையில் ஒருவர் பலி

ஆலந்தூர் – மீனம்பாக்கம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது மெட்ரோ ரயில் பணியின் 50 கிலோ எடைக் கொண்ட இரும்புச் சட்டம் விழுந்ததில் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த கிரிதர் என்ற பொறியாளர் படுகாயமடைந்தார்.

அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை சோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே கிரிதர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக பரங்கிமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கட்டுமான பொறியாளர், மேற்பார்வையாளரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

Leave a Reply