தேசிய மொழிப் பெயர்ப்பாளர் அட்டவணை மேம்படுத்த சாகித்ய அகாடமி திட்டம்

 மேம்படுத்த
சாகித்ய அகாடமி திட்டம்

சென்னை, மார்ச் 27, 2015 
தேசிய மொழிப் பெயர்ப்பாளர்கள் அட்டவணையை மேம்படுத்த சாகித்ய அகாடமிதிட்டமிட்டுள்ளது. இந்த அட்டவணையில் எந்த இந்திய மொழியிலிருந்தும் 
மற்றொரு இந்திய மொழிக்கு மொழிப் பெயர்ப்பு செய்யக்கூடிய மொழிப் பெயர்ப்பாளர்களின் விவரங்கள் இருக்கும். அரசு, தூதரகங்கள், செய்திதாள்கள், பத்திரிக்கைகள், செய்தித்தாள்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் பல்வேறு மொழி பெயர்ப்பு சேவை மையங்கள் ஆகியோரின் தொகுப்பு கொண்ட பெற்று 
இந்த அட்டவணையை விநியோகிக்க அகாடமி திட்டமிட்டுள்ளது.

சிறப்பாக மொழி பெயர்ப்பு செய்யக்கூடியவர்கள் மொழிப் பெயர்ப்புக்காக தங்களை சாகித்ய அகாடமியுடன் பதிவு செய்துக்கொள்ளலாம். பதிவு முற்றிலும் 
இலவசமாகும். வயது, பாலினம், குறிப்பிட்ட பிரிவில் நிபுணத்துவம் ஆகியவை 
பதிவுக்கு அவசியமில்லை.

அஞ்சல் வழியாகவும் அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் இதற்கு பதிவு செய்துக்கொள்ளலாம். அஞ்சல் வழி பதிவுக்கான முகவரி குணா வளாகம், மெயின்
பில்டிங், 2-வது மாடி (பின் புறம்), 443 (பழைய எண். 304), அண்ணா சாலை, தேனாப்பேட்டை, சென்னை – 600 018, தொலை பேசி எண். 24354815, 24311740. உங்கள் விவரங்களை .   என்ற மின் 
அஞ்சலுக்கும் அனுப்பலாம்.