இயல் – இசை – நாடகத் திருவிழா
வரும் ஜுலை மாத இறுதியில் சென்னையில், தமிழக அளவிலான நாடகப்போட்டி, இசைப்போட்டி, நடனப் போட்டிகளை டாப்சி (தமிழ்நாடு திரைப்பட படைப்பாளிகளின் ஒருங்கிணைந்த இந்தியா கூட்டமைப்பு) நடுத்துகிறது. இதில் தமிழகம் முழுக்க இருக்கும் சிறந்த நாடக குழுக்கள், ஓரங்க நாடகம், அமைச்சூர் நாடகம், சரித்திர சமூக நாடகங்கள். நாடகங்களின் கதாசிரியர்கள் முன்பதிவு செய்து கொள்ள வரவேற்கப் படுகிறார்கள்.
அது போன்றே! சிறந்த பாடல் இசைக் குழுக்களும் வரவேற்கப்படுகிறது. அது போன்றே தமிழகம் முழுக்க இருக்கும் நடன, நாட்டியத்தில் சிறந்து விளங்கும் அமைப்புகள், டாப்சியின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மொத்தம் 6 நாட்கள் நடைபெறும் இயல், இசை நாடகத் திருவிழாவில், காலை 9.00 மணிக்கு ஆரம்பித்து, இரவு 8.00 மணி வரை நடைபெறும். இதில் பிரபல முன்னணி தயாரிப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், முன்னணி இயக்குநர்கள், நீதிபதிகளாகவும், சிறப்பு அழைப்பாளர்களாகவும் பங்கு பெறுவார்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த நாடகங்களுக்கு முதல் பரிசு ரூ.75,000/- ரொக்கமும், இரண்டாம் பரிசு ரூ.50,000/- ரொக்கமும், மூன்றாம் பரிசு ரூ.25,000/- ரொக்கமும் வழங்கப்படும். அது போன்றே! தேர்ந்தெடுக்கப்படும் பாட்டிசைக் குழுவினர்க்கு முதல் பரிசு 75,000/- ரொக்கமும், இரண்டாம் பரிசு ரூ.50,000/- ரொக்கமும், மூன்றாம் பரிசு ரூ.25,000/- ரொக்கமும் வழங்கப்படும்.
அதுபோன்றே! தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த நடன நாட்டிய குழுவினர்க்கு முதல் பரிசு ரூ.75,000/- ரொக்கமும், இரண்டாம் பரிசு ரூ.50,000/- ரொக்கமும், மூன்றாம் பரிசு ரூ.25,000/- ரொக்கமும் வழங்கப்படும்.
மேலும் டாப்சியின் வெற்றி கேடயங்களும், கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களுக்கும் சிறப்பு பரிசுகளும், மேடையில் வழங்கப்படும். வளர்ந்து வரும் திரைப்படத் துறையில் சிறந்த கதைகளின் தேடலுக்காகவும், தமிழ்நாட்டின் சமூக, சமுதாய மேம்பாட்டிற்காகவும், கலைத் துறையில் நூற்றுக்கணக்கான புதியவர்கள், அறிமுகமாகி சாதனைப் படைக்க வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு வருடமும் டாப்சி, இயல் இசை நாடகத் திருவிழாவை கோலாகலமாக நடத்தும்.
அணுக வேண்டிய முகவரி
கைப்பேசி : 9445720888
9444241039
Land Line : 044 – 28344741
Web site : www.tofcii.com
Comments
comments