துபாய் செல்லும் கார்த்தி-தமன்னா
கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கொம்பன்’. இப்படத்தையடுத்து தற்போது நாகார்ஜூனாவுடன் இணைந்து தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார்.
இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கினர். தொடர்ந்து நடைபெற்று வந்த முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்டமாக துபாய் செல்ல உள்ளனர். அங்கு அனேகமாக கார்த்தி-தமன்னா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியை படமாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வம்சி பைடிபாலி இயக்கி வரும் இப்படத்தை பி.வி.பி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். வினோத் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
Comments
comments