காஞ்சனாவில் திக்குவாய் பேயாக நடித்து அனைவரையும் கவர்ந்த ஜெய ஆனந்த்

காஞ்சனா-2 படத்தில் திக்குவாய் பேயாக வந்து அனைவரையும் கவர்ந்தவர் ஜெய ஆனந்த். ஹரியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வீரமணி இயக்கத்தில் ஜெய ஆனந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘திறப்பு விழா’ படம் ரிலீஸாக தாமதம் ஆகிறது. ஆனாலும் ‘காஞ்சனா 2’ படத்தில் தனக்கு நல்ல அறிமுகம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் ஜெய ஆனந்த்.

தியேட்டர் லேப் கூத்துப்பட்டறையில் 5 வருடங்களில் பல நாடகங்கள் நடித்து நடிப்புத் திறமையை வளர்த்துக் கொண்ட இவர் “காஞ்சனா 2″ படத்தில் ஒவ்வொரு காட்சிகளின்போதும் ஒரே டேக்கில் நடித்ததால் ராகவா லாரன்ஸ் இவரை அழைத்து பாராட்டி உற்சாகப் படுத்திக் கொண்டே இருந்திருக்கிறார்.

இது குறித்து ஜெய ஆனந்த் கூறும்போது, “படத்தில் நான் 30 நாட்களுக்கு மேல் மாஸ்டருடன் நடித்தேன். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். நீளம் காரணமாக சில நல்ல காட்சிகள் குறைக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் படத்தில் என்னுடைய கேரக்டருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதென்றால் அதற்கு ராகவா லாரன்ஸ் மாஸ்டர்தான் காரணம்” என்கிறார்.

இவர் ‘கண்ணாமூச்சி’ என்ற குறும்படத்திற்காக சென்ற வருடம் சிறந்த நடிகர் 2014 விருது வாங்கியிருக்கிறார். தற்போது கதாநாயகனாக நடித்திருக்கும் ‘திறப்புவிழா’, மு.களஞ்சியத்தின் ‘ஆனந்த மழை’ படங்கள் விரைவில் வெளியாகின்றன. மேலும் ஒரு பெரிய படத்தில் வில்லனாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.

Comments

comments