படம் இயக்கும் எண்ணம் தற்போது இல்லை: விஜய் ஆண்டனி
இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி, ‘நான்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் வெற்றி பெறவே ‘சலீம்’ என்னும் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. தற்போது இவரது நடிப்பில் வெளியாகியுள்ள ‘இந்தியா பாகிஸ்தான்’ படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வெற்றி பெற்ற விஜய் ஆண்டனி அடுத்த கட்டமாக இயக்குனராக அவதாரம் எடுக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இதை விஜய் ஆண்டனி மறுத்துள்ளார்.
இது குறித்து விஜய் ஆண்டனி கூறும்போது, “நான் தற்போது ‘பிச்சைக்காரன்’ மற்றும் ‘சைத்தான்’ படங்களில் நடித்து வருகிறேன். மேலும் ‘திருடன்’ மற்றும் ‘ஹிட்லர்’ படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறேன். நான் சலீம் 2 பாகத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. எனக்கு படம் இயக்குவது ரொம்ப பிடிக்கும். கைவசம் படங்கள் இருப்பதால் தற்போதைக்கு இயக்கும் எண்ணம் இல்லை. நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்” என்றார்.
Comments
comments