மீண்டும் விஷால் படத்திற்கு இசையமைக்கும் ஆதி

விஷால் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘பாயும் புலி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும் நிகிதா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தையடுத்து பாண்டிராஜ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு இசையமைக்க ஹிப்ஹாப் தமிழா புகழ் ஆதி ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் ஏற்கனவே விஷால் நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

பின்னணி பாடகராக இருந்த ஆதி ‘ஆம்பள’ படம் மூலம்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக ‘பழகிக்கலாம்…’ என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்தது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல் அனைத்தையும் இவரே எழுதியிருந்தார்.

தற்போது இரண்டாவது முறையாக விஷால் படத்திற்கு இசையமைப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று ஹிப்ஹாப் தமிழா ஆதி கூறியிருக்கிறார்.

Comments

comments