Monday, May 18, 2015
                                                                                                                                                                                   
Search

- search results

If you're not happy with the results, please do another search

ஜூன் 12ம் தேதி சந்தானத்தின் இனிமே இப்படித்தான் ரிலீஸ்

‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடித்து வரும் படம் ‘இனிமே இப்படித்தான்’. இதில் சந்தானத்திற்கு ஜோடிகளாக ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தில் நடித்த ஆஷ்னா சவேரி மற்றும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த அகிலா கிஷோர் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

முருகானந்த் இயக்கி வரும் இப்படத்தை சந்தானம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹேண்ட் மேட் பிலிம்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் அமைந்துள்ள பாடல்களும் படத்தின் டிரைலரும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இப்பணிகளை முடிக்கவுள்ள நிலையில், படத்தை ஜூன் மாதம் 12ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

ஜெயம் ரவி படத்தின் பாடல்கள் ரெடி

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘அப்பாடக்கர்’. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக திரிஷா-அஞ்சலி ஆகியோர் நடித்து வருகின்றனர். சுராஜ் இயக்கி வருகிறார். தமன் இசையமைத்து வருகிறார். ஆக்ஷன் மற்றும் காமெடி படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் தமன் இசையில் நடிகர் சிம்பு, விவேக், இசையமைப்பாளர் தேவா மற்றும் ஜெயம் ரவிகூட ஒரு பாடல் பாடியிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இப்படத்தின் பாடல் பதிவு எல்லாம் முடிந்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.

பாடல் பதிவு முடிந்துவிட்டதால் எந்நேரமும் இப்படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தவிர ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படமும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்திற்கு பிறகு ‘அப்பாடக்கர்’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எலி படத்தில் வடிவேலு புது கெட்டப்

வடிவேல் ‘எலி’ படத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக சதா நடிக்கிறார். யுவராஜ் தயாளன் இயக்குகிறார். சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஜி.சதீஷ்குமார் தயாரிக்கிறார்.

1960களில் நடக்கும் கதையம்சம் உள்ள படமாக இது தயாராகிறது. இதற்காக அந்த கால கட்டத்து ‘கெட்டப்’பில் வடிவேல் தோன்றுகிறார்.

இதற்காக உடை, முடியலங்காரத்தை மாற்றி உள்ளார். இதில் அவருக்கு துப்பறியும் போலீஸ் வேடம் என்பதால் நிறைய மாறுவேட கெட்டப்களும் உள்ளன. பெண் கேரக்டரிலும் வருகிறார்.

மேற்கண்ட தகவலை படத்தின் இயக்குனர் யுவராஜ் தயாளன் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, ‘‘முழு காமெடி படமாக எடுக்கிறோம். ஒருகொள்ளை கும்பலை பிடிக்க ரகசிய போலீசாக வடிவேல் செல்கிறார். அங்கு நடக்கும் சம்பவங்களே கதை. வடிவேல் ‘எலி’யின் உடல் மொழியை உள்வாங்கி அதன்படி நடிக்கிறார். நிறைய அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். பஞ்ச் வசனங்களும் இருக்கும்‘‘ என்றார்.

வடிவேல் கூறும்போது, ‘‘குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரிக்க வைக்கும் படமாக தயாராகி உள்ளது.

1969–ல் ராஜேஷ்கண்ணா, சர்மிளாதாகூர் இணைந்து நடித்து பெரிய வெற்றி பெற்ற ஆராதனா படத்தில் இடம் பெற்ற மேரே சப்னோ சிரானி என்ற பாடலை இந்த படத்தில் முழு உரிமை பெற்று பயன்படுத்தி உள்ளோம். இந்த பாடலுக்கு தாரா நடன இயக்கத்தில் நானும், சதாவும் இணைந்து நடனம் ஆடினோம். மூணாறில் படமாக்கப்பட்டது. பாடல் காட்சி சிறப்பாக வந்துள்ளது. ஒரு தமிழ் படத்தில் முழு இந்திப்பாடல் இடம் பெறுவது இதுவே முதல் முறை. இம்மாதம் இறுதியில் படம் ரிலீசாகிறது’’ என்றார்.

ஆர்யா படத்தில் நாகார்ஜூனா சிறப்பு தோற்றம்

‘இரண்டாம் உலகம்’ படத்திற்குப் பிறகு ஆர்யா-அனுஷ்கா இணைந்து நடித்து வரும் படம் ‘இஞ்சி இடுப்பழகி’. இப்படத்தை கே.எஸ்.பிரகாஷ் இயக்கிவருகிறார். பிவிபி நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. மரகதமணி இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் தெலுங்கில் ‘சைஸ் ஜீரோ’ என்னும் பெயரில் உருவாகிறது. இப்படத்தில் சுருதிஹாசன் ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜூனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. தெலுங்கு ரசிகர்களை கவரவே நாகார்ஜூனாவை நடிக்க வைப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பிவிபி நிறுவனம் தயாரித்து வரும் புதிய படத்தில் கார்த்தியுடன் இணைந்து நாகார்ஜூனா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்து புலி கோவிலில் மங்களகரமாக முடிந்த புலி படப்பிடிப்பு

விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கி புலி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் தலக்கோணம் அருகில் அடர்ந்த காட்டுப் பகுதியிலும் நடைபெற்றது.

இதையடுத்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்துவதற்காக தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளில் புலி படக்குழு முகாமிட்டிருந்தது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதை இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசனே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, புலி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தாய்லாந்தில் புகழ்பெற்ற புலி கோவில் முன் மங்களகரமாக இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது என்றார். படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதால், படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக களமிறங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்.

முன்னதாக, இப்படத்தை ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால், கிராபிக்ஸ் பணிகளுக்கு அதிக நேரம் தேவைப்படுவதால், படத்தை செப்டம்பர் 17-ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீதேவி கபூர், நான் ஈ சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ராய் லட்சுமியை எலிசபெத் ராணி என்று புகழ்ந்த ரசிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராய் லட்சுமி. ‘காஞ்சனா’, ‘மங்காத்தா’ ‘அரண்மனை’ ஆகிய படங்களில் இவரது நடிப்பு பரவலாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது இவர் கைவசம் ‘சவுகார்பேட்டை’ மற்றும் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ‘ஒரு டிக்கெட்டுல ரெண்டு படம்’ ஆகிய படங்கள் உள்ளன. மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அகிரா என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

இவர், தினமும் தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் ஏதாவது ஒரு செய்தி வெளியிட்டு வருகிறார். மேலும், இவர் படப்பிடிப்பில் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் அந்த வலைப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இன்று அவர் காரில் அமர்ந்திருந்தபடி ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், நான் 26-வயதில் எலிசபெத் ராணியை பார்த்ததில்லை. இப்போது நான் பார்க்கிறேன். தலையில் கிரீடம் மட்டும்தான் இல்லை என்று கூறியுள்ளார். இந்த கருத்தை படித்த லட்சுமிராய், அதை ரீடுவிட் செய்துள்ளார். தன்னை எலிசபெத் ராணி அளவுக்கு நேசித்த அந்த ரசிகர் மீது ராய் லட்சுமிக்கு தனி பாசம் எழுந்துள்ளது.

ஆன்மீகத்துக்கு மாறிய அனுஷ்கா

நடிகை அனுஷ்கா ஆன்மீகத்துக்கு மாறியுள்ளார். தினமும் யோகா, தியானம், பூஜை என்று இருக்கிறார். ஓய்வு நேரங்களில் வீட்டின் பூஜை அறையிலேயே இருக்கிறாராம். கண்களை மூடி தியானத்தில் முழுவதுமாக மூழ்கி விடுகிறார். விரைவில் இமயமலைக்கு செல்லும் முடிவிலும் இருக்கிறாராம்.

சமீபத்தில் நயன்தாரா காவி சேலை அணிந்து இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்காவின் ஆபாச வீடியோ ஒன்று சில தினங்களுக்கு முன் இணைய தளங்களிலும், வாட்ஸ் அப்களிலும் பரவியது. இது தமிழ், தெலுங்கு பட உலகில் பரபரப்பை எற்படுத்தியது. இந்த படம் குறித்து இன்னும் அவர் கருத்து சொல்லவில்லை. ஆபாச வீடியோ அனுஷ்காவை ரொம்பவும் புண்படுத்திவிட்டதாக நெருக்கமானவர்கள் சொல்கின்றனர். இதுவே அவரை தீவிர ஆன்மீகத்துக்கு மாற வைத்துள்ளது என்கின்றனர்.

ஏற்கனவே ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்தார். அப்போது ரஜினியிடம் இருந்து நிறைய ஆன்மீக விஷயங்களை தெரிந்து கொண்டார். பக்குவப்படவும் செய்தார். இப்போது ஆன்மீக பாதைக்கு திரும்பி உள்ளார்.

இதற்கிடையில் அனுஷ்காவுக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர் தீவிரம் காட்டுகின்றனர். ஆனால் அனுஷ்கா இதுவரை திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நடிகை அஞ்சலி மாப்ள சிங்கம் படப்பிடிப்பில் இருந்து மாயமாகி விட்டதாக சமீபத்தில் செய்திகள் பரவின. அவருக்கு திருமணம் முடிந்து குழந்தை இருக்கிறது என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அஞ்சலி அளித்த பேட்டி வருமாறு:–

அப்பா டக்டர், மாப்ள சிங்கம் படங்களில் கடந்த ஆறு மாதமாக ஓய்வு இல்லாமல் நடித்தேன். எனது காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்து விட்டேன். மாப்ள சிங்கம் படப்பிடிப்பில் இருந்து நான் காணாமல் போய்விட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. இது குறித்து அந்த படத்தின் இயக்குனரோ, தயாரிப்பாளரோ புகார் எதுவும் செய்யவில்லை. அப்படி இருக்க இது போன்ற வதந்தி ஏன் பரவியது என்று புரியவில்லை.

தற்போது தெலுங்கு படமொன்றில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். கடந்த காலங்களில் சில பிரச்சினைகளால் தமிழ் படங்களில் நடிக்காமல் இடைவெளி விட்டேன். ஆனாலும் தெலுங்கு படங்களில் அப்போது நடித்துக் கொண்டுதான் இருந்தேன். தற்போது எல்லாம் நல்ல படியாக போய்க்கொண்டு இருக்கிறது. சினிமாவில் இருப்பவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாக தெரியும்.

உண்மைகளையும் அவர்கள் அறிந்து வைத்து இருக்கிறார்கள். என்னைப் பற்றி நிறைய வதந்திகள் பரப்பப்பட்டன. அப்படி வதந்தி பரப்பியர்கள் யார் என்று எனக்கு தெரியாது. எனது கடந்த கால விஷயங்கள் பற்றி இப்போது பேச நான் விரும்பவில்லை. இப்போது அந்த பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விட்டன. நான் தைரியமான பெண், பிரச்சினைகளை நானே சமாளித்தேன். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளேன்.

எனக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும் ஒரு குழந்தை இருப்பதாகவும் செய்திகள் பரப்பப்பட்டு உள்ளன. இது வதந்திதான். என் உறவினரின் குழந்தையோடு நின்று போட்டோ எடுத்து இருந்தேன். அதை வைத்து எனக்கு குழந்தை இருக்கிறது என்று புரளி கிளப்பி விட்டார்கள். எனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன். உடல் எடையை ஏற்கனவே ஒன்பது கிலோ குறைத்து இருந்தேன். இப்போது மேலும் மூன்று கிலோ குறைத்துள்ளேன். இறைவி படத்தில் என்னை ஒல்லியாக பார்க்கலாம்.

இவ்வாறு அஞ்சலி கூறினார்.

விஷால் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘பாயும் புலி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும் நிகிதா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தையடுத்து பாண்டிராஜ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு இசையமைக்க ஹிப்ஹாப் தமிழா புகழ் ஆதி ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் ஏற்கனவே விஷால் நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

பின்னணி பாடகராக இருந்த ஆதி ‘ஆம்பள’ படம் மூலம்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக ‘பழகிக்கலாம்…’ என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்தது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல் அனைத்தையும் இவரே எழுதியிருந்தார்.

தற்போது இரண்டாவது முறையாக விஷால் படத்திற்கு இசையமைப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று ஹிப்ஹாப் தமிழா ஆதி கூறியிருக்கிறார்.

கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கொம்பன்’. இப்படத்தையடுத்து தற்போது நாகார்ஜூனாவுடன் இணைந்து தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார்.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கினர். தொடர்ந்து நடைபெற்று வந்த முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்டமாக துபாய் செல்ல உள்ளனர். அங்கு அனேகமாக கார்த்தி-தமன்னா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியை படமாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வம்சி பைடிபாலி இயக்கி வரும் இப்படத்தை பி.வி.பி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். வினோத் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.