எலிக்காக எலியாகவே மாறினார் வடிவேலு: இயக்குனர் பெருமிதம்

வடிவேலு-சதா நடிப்பில் உருவாகியுள்ள காமெடி படம் ‘எலி’. இப்படத்தை யுவராஜ் தயாளன் இயக்கியுள்ளார். இப்படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, இப்படத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ‘டாக்கீங் ரேட்’ என்ற புதிய மொபைல் ஆப் வெளியிடப்பட்டது.

இதையடுத்து படத்தின் இயக்குனர் யுவராஜ் தயாளன் பேசினார். அவர் பேசும்போது. இப்படம் 1960-70 காலகட்டங்களில் நடக்கும் கதை. இந்த படத்தில் வடிவேலு ஒரு உளவாளியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு எலி என்று எதற்கு தலைப்பு வைத்தோம் என்றால், எலியை நாம் ஒரு கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. நாம் ஒரு இடத்தில் அதை அடைத்து வைத்தால், அது ஏதாவது ஒரு திட்டம் போட்டு வேறு வழியில் தப்பிச் சென்றுவிடும். இந்த படத்திலும் வடிவேலு அந்த மாதிரி சேட்டை செய்வார். அதற்குத்தான் எலி என்ற தலைப்பை வைத்திருக்கிறோம்.

இந்த படத்தின் தலைப்பை வடிவேலுவுடன் கூறியவுடனேயே அவர் அந்த தலைப்பை பிடித்துக்கொண்டு, எலி எந்த மாதிரியெல்லாம் சேட்டை செய்யுமோ, முகபாவணை கொடுக்குமோ அதேபோல், இந்த படம் முழுவதும் செய்து அசத்தியிருக்கிறார். இந்த மாதத்திலேயே இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.

Comments

comments