தேசிய விருது வென்ற 10 கலைஞர்களின் சங்கமத்தில் த்ரிஷ்யம் இந்தி ரீமேக்

0 45

தேசிய விருது வென்ற ஒருவர், அடுத்து ஒரு திரைப்படத்தில் பணிபுரிந்தாலே அந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கும் நிலையில் தேசிய விருது வென்ற 10 கலைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரே திரைப்படத்தில் பணி புரிந்தால்?…

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் மெகா ஹிட்டான ‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்காகத்தான் இந்த தேசிய விருது கலைஞர்களின் சங்கமம். நாயகனாக நடிக்கும் அஜய் தேவ்கன், சாக்ம் (Zakhm) மற்றும் தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் (The Legend Of Bhagat Singh) ஆகிய படத்திற்காக 2 தேசிய விருதுகளை வென்றவர். ‘இயக்குனரின் நடிகை’ என்று பாராட்டப்படும் நாயகி தபுவும் சாந்தினி பார் (Chandni Bar) மற்றும் மாச்சீஸ் (Maachis) திரைப்படங்களுக்காக 2 தேசிய விருதுகளை வென்றவர். இயக்குனர் நிஷிகந்த கமத் டாம்பிவலி பாஸ்ட் (Dombivali Fast) என்ற மராத்தி படத்தை இயக்கியதற்காக தேசிய விருது வென்றவர். கேமரா மேன் அவினாஷ் அருண், எடிட்டர் ஆரிப் ஷேக், இசையமைப்பாளர் விஷால் பரத்வாஜ் பாடலாசிரியர் குல்சார் சாப் என்று அனைவரும் தேசிய விருது பெற்று தங்கள் திறமையை நிரூபித்த கலைஞர்கள்.

இவ்வளவு ஏன் படத்தை தயாரிக்கும் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் மேரி கோம் (Mary Kom)  திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றது. இந்த நிறுவனம் தேசிய விருது வென்ற மேலும் இருவருடன் சேர்ந்து இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படியாக கலை தாகம் கொண்ட மேதைகள் இணைந்து உருவாக்கும் ‘த்ரிஷ்யம்’ திரைப்படத்திற்கு உண்டாகியுள்ள எதிர்பார்ப்பை கேட்கவா வேண்டும். இப்போதே பாலிவுட் மீடியாக்களில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று விட்டது ‘த்ரிஷ்யம்’.

Comments

comments