ஆர்யா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’. யுடிவி நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகிற 15-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படம் தமிழகத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடவுள்ளனர்.

இப்படம் வெளியாகும் அதே நாளில் ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் மற்றொரு படமான ‘யட்சன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிடவுள்ளனர். ‘யட்சன்’ படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஆர்யாவுடன், கிருஷ்ணாவும் இணைந்து நடித்துள்ளார். தீபா சன்னதி, சுவாதி ரெட்டி என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டதை நெருங்கியிருக்கிறது. இந்த படத்தையும் யுடிவி நிறுவனமே தயாரித்து வருகிறது.

ஒரேநாளில் ஆர்யாவின் ‘புறம்போக்கு’ படமும், ‘யட்சன்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியாவதால் ஆர்யா ரசிகர்கள் இரட்டை சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Comments

comments