பசியால் வாடிய நாய்க்கு அரவணைப்பு கொடுத்த ராய் லட்சுமி

ராய் லட்சுமி தற்போது ஸ்ரீகாந்துடன் இணைந்து ‘சவுகார்பேட்டை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராய் லட்சுமி பேய் வேடத்திலும், பள்ளி மாணவி வேடத்திலும், மாடர்ன் பெண் வேடத்திலும் நடிப்பதுபோல் சமீபத்தில் புகைப்படங்கள் வெளிவந்தன.

இந்நிலையில், பள்ளி மாணவி வேடத்தில் இவர் நடிப்பது போன்ற காட்சிகளை சென்னைக்கு அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படமாக்கினர். அப்போது, அந்த பள்ளியில் உணவு இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த நாய்க்குட்டியை ராய் லட்சுமி கவனித்தார். பரிதாப நிலையில் கிடந்த அந்த நாய்க்கு பாலும், பிஸ்கட்டும் கொடுத்து அதன் பசியை போக்கினார் ராய் லட்சுமி.

இவரது செயலை படக்குழுவினர் அனைவரும் வியந்து பாராட்டினர். இது ராய் லட்சுமிக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது. இவர் நடித்து வரும் ‘சவுகார்பேட்டை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. இதுதவிர, முருகதாஸ் இந்தியில் இயக்கும் ‘அகிரா’ என்ற படத்திலும் ராய் லட்சுமி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments