சிம்புக்கு புது ஜோடியை கண்டுபிடித்த கௌதம் மேனன்

கௌதம் மேனன் ‘என்னை அறிந்தால்’ படத்தை தொடங்குவதற்கு முன்பாக சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றை தொடங்கினார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக பல்லவி சுபாஷ் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அஜித்தை வைத்து ‘என்னை அறிந்தால்’ படத்தை இயக்க கௌதம் மேனன் சென்று விட்டார். இதனால் சிம்பு படம் கிடப்பில் இருந்தது.

‘என்னை அறிந்தால்’ படத்தை முடித்த பின்பு உடனே சிம்பு படத்தை தொடங்க ஆரம்பித்தார் கௌதம்மேனன். இதற்கு ‘அச்சம் என்பது மடமையடா’ என்று பெயரும் வைத்தார். இதன் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் கால்ஷீட் பிரச்சனையில் சிம்புக்கு ஜோடியாக நடித்து வந்த பல்லவி சுபாஷ் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனால் சிம்புக்கு ஜோடியாக பல ஹீரோயின்களை கௌதம் மேனன் தேடி வந்தார். தற்போது மஞ்சிமா மோகன் என்னும் மலையாள நடிகையை இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக்கியுள்ளார். மஞ்சிமா மோகன் மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ‘ஒரு வடக்கன் செல்பி’ என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஏற்கனவே சிம்பு-பல்லவி சுபாஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளை 30 சதவிகிதம் படமாக்கிவிட்ட கௌதம் மேனன், தற்போது அந்த காட்சிகளை சிம்பு-மஞ்சிமா மோகனை வைத்து மீண்டும் படமாக்கவுள்ளார்.

Comments

comments